ஆட்சிக்கவிழ்ப்பு சதி நிறைவு நிறைவுபெற்றுள்ளது!

ஆட்சிக்கவிழ்ப்பு சதி நிறைவு நிறைவுபெற்றுள்ளது!

ஆட்சிக்கவிழ்ப்பு சதி நிறைவு நிறைவுபெற்றுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்தோடு மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மீண்டும் எதிர்வரும் ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவை உறுப்பினர்களும் வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை தமது செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, “போலி பிரதமரது மனு தோல்வியடைந்துவிட்டது. இதனால் ஆட்சிக்கவிழ்ப்பு சதி நிறைவு நிறைவுபெற்றுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று இரவு பிரதமராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net