சமுத்திரகனியின் ‘அடுத்த சாட்டை’!

சமுத்திரகனியின் ‘அடுத்த சாட்டை’!

சமுத்திரகனி நடிப்பில் வெளியாகிய சாட்டை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த திரைப்படத்தின் மூலம் மாணவர் மற்றும் ஆசியர்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்தும் மாணவர்கள் பள்ளி பருவத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் சிறப்பாக காண்பிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ‘அடுத்த சாட்டை ‘ என பெயர் சூட்டப்பட்டு படத்திற்கான பூஜை நேற்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள்.

இதேவேளை சமுத்திரகனி நடிப்பில் வெளியாகிய அப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net