விண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்!

விண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்!

அமெரிக்காவின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளிக்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம் விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று திரும்பியுள்ளது.

ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு பறந்தது. இது அந்த விமானத்தின் நான்காவது பரிசோதனை பயணமாகும்.

மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஓரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது சோதனை ஓட்டத்தை மேற்கொண்ட குறித்த விமானம் கலிபோர்னிய பாலைவன பகுதிக்கு பாதுகாப்பாக மீளத் திரும்பியது.

அமெரிக்காவின் விண்கல திட்டங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த பின்னர் விண்வௌிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் விமானங்கள் தொடர்பாக கடினமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த முயற்சி வெற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net