11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – 02 கடற்படையினர் கைது!

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – 02 கடற்படையினர் கைது!

11 இளைஞர்கள் 2008/2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு கடற்படையினரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (13) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2008/2009 ஆம் ஆண்டு கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னர் இரண்டு கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் ஆகஸ்ட் 14 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேவி சம்பத் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் நேவி சம்பத் 10 வது சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1391 Mukadu · All rights reserved · designed by Speed IT net