ஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது!

.  

ஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். இதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் தரப்பினர் மாத்திரம் விதிவிலக்கல்ல.

நாங்கள் தற்போது எதிர்த்தரப்பினராகச் செயற்படுவதே சிறப்பானதாகும். இடைக்கால அரசைப் பொறுப்பேற்று மஹிந்த ராஜபக்‌ஷ தவறு இழைத்து விட்டார் என்பதைப் பலமுறை எடுத்துரைத்தும், சில பதவி மோகம் கொண்டவர்களினால் எமது கருத்து மதிப்பிழக்கப்பட்டது.

இனியாவது மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © 4760 Mukadu · All rights reserved · designed by Speed IT net