சர்வதேச தேயிலை தினம்!

சர்வதேச தேயிலை தினம்!

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச தேயிலை தினம் இன்று பொகவந்தலாவ புனித செபமாலை மாத பங்கு மண்டபத்தில் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யபட்டது.

இதன் போது பொகவந்தலாவ பஸ் தரிப்பிடத்தில் இருந்து பொகவந்தலாவ புனித செபமாலை கிறிஸ்த்துவ ஆலயம் வரை பேரணி ஒன்றும் இடம் பெற்றது

இந் நிகழ்வில் சிலாபம் மறைமாவட்ட கரிட்டஸ்,சிலாபம் நிர்வனத்தின் இயக்குனர் அருட் தந்தை என்டன் வயமன் பிரிஸ்,குருனாகல் மாவட்ட கரிட்டாஸ் இயக்குனர் அருட்தந்தை டெஸ்மன் பெரேரா,நுவரெலியா மாவட்ட இயக்குனர் அருட்தந்தை நியூமன்பிரிஸ் மாத்தளை மாவட்ட இயக்குனர் அருட்தந்தை மரியதாஸ் அடியார்கள் ,வைத்தியர் கிஸான் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net