கனடாவில் பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி!

கனடாவில் பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி!

கனடாவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலத்தில் தொங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டீஸ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது ஜான்சன் ஸ்டிரீட் பாலம். இந்த பாலத்திற்கு நேற்று(சனிக்கிழமை) காலை இளைஞர் ஒருவர் குடிபோதையில் சென்றுள்ளார்.

பின்னர் பாலத்தின் ஓரத்திலுள்ள கம்பிகளை பிடித்தபடி இளைஞர் தொங்கிய நிலையில் கிழே இருந்த தண்ணீரில் விழுந்துள்ளார்.

இதை பார்த்த பார்த்த அப்பகுதி மக்கள் அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் தண்ணீரில் விழுந்த இளைஞரை மீட்க முயன்றும் முடியவில்லை.

இதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 1323 Mukadu · All rights reserved · designed by Speed IT net