மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை!
நாளை மறுதினம் கூடவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் கட்சி தலைவர் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து புதிய அமைச்சரவை நாளைய தினம் நியமிக்கப்படவுள்ள நிலையில் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அவர்கள் தொடர்ந்தும் எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது.
ஆகவே பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக நாம் செயற்படவுள்ளோம். இந்த கோரிக்கையை நாளைய தினம் சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்தித்து அறிவிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.