புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!

இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை மீள் மதிப்பீட்டுக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்ததாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்

Copyright © 3003 Mukadu · All rights reserved · designed by Speed IT net