வரலாற்றில் இணைந்த மஹிந்த!

வரலாற்றில் இணைந்த மஹிந்த!

தானாக முன்வந்து பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தமையினால் மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் இணைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்த ஒரே நபர் மஹிந்த ராஜபக்ச தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டலஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் 15 பேர் பிரதமராக செயற்பட்டுள்ளனர். அந்த 15 பேரில் ஒருவர் கூட தாமாக முன்வந்து பிரதமர் பதவியை தியாகம் செய்யவில்லை.

தனது பதவியை தானமாக வழங்கிய எங்கள் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஒருவர் மாத்திரமே. அதன் ஊடாக அவர் இலங்கையின் வரலாற்றில் இணைந்துள்ளார்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மஹிந்த தனது பதவியை விட்டு கொடுத்துள்ளார். அதனாலேயே அதற்கான சிறந்த வார்த்தையாக தானம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net