நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தடுமாற்றத்தில் இலங்கை அணி!

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தடுமாற்றத்தில் இலங்கை அணி!

நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, தடுமாற்றத்துடன் விளையாடி வருகின்றது.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து, 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (திங்கட்கிழமை) Wellingtonஇல் நடைபெற்று வருகின்றது.

இதில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைிவில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து, 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், எஞ்சலோ மெத்தியூஸ் 83 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 80 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் டிம் சௌத்தீ 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கு பதிலடித்தாடிய நியூசிலாந்து அணி, அதன் முதல் இன்னிங்சில் Tom Latham இன் இரட்டைச் சதத்தின் துணையுடன் 578 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய Tom Latham இறுதிவரையில் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அவரைத் தவிர, அணித்தலைவர் வில்லியம்சன் 91 ஓட்டங்களையும், ரொஸ் டெய்லர், Henry Nicholls ஆகியோர் தலா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், லஹிரு குமார 4 விக்கட்டுக்களையும், டில்ருவன் பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 296 ஓட்டங்கள் பின்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அணித்தலைவர் மென்டிஸ், மெத்தியூஸ் ஆகியோர் களத்தில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடுகின்றனர்.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், தோல்வியைத் தடுக்க இலங்கை அணி போராடுகிறது. 7 விக்கட்டுக்களே கைவசமிருக்க இன்னும் 276 ஓட்டங்களினால் இலங்கை அணி பின்னிலையில் உள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net