பிரான்ஸில் அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் வரி அறிமுகம்!

பிரான்ஸில் அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் வரி அறிமுகம்!

பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான வரி விதிப்புத் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எதையும் எடுக்காத நிலையில் ஜனவரி முதலாம் திகதி முதல் தமது நாட்டில் புதிய டிஜிட்டல் வரி அறிமுகப்படுத்தப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இவ்வரியின் மூலம் 2019ஆம் ஆண்டில் 500 மில்லியன் யூரோக்களை ((£450 மில்லியன்) பிரான்ஸ் பெறமுடியுமென பிரான்ஸ் நிதியமைச்சர் Bruno Le Maire தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வரிவிதிப்பை அறிமுகப்படுத்துமாறு ஐரோப்பிய ஆணையத்துக்கு, ஜேர்மனியுடன் இணைந்து பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவந்தது.

ஆனால் அயர்லாந்து, செக் குடியரசு, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இவ்வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய வரி சீர்திருத்தங்கள் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net