ஒரே படத்தில் இணையும் 8 கதாநாயகிகள்!

ஒரே படத்தில் இணையும் 8 கதாநாயகிகள்!

என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், மொத்தம் 8 முன்னணி கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாவித்ரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, செளகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிக்கின்றனர்.

இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர்.

இப்படி ஒரே படத்தில் 8 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net