மைத்திரியை கொலை செய்யும் விவகாரம்! சிக்கிய தரவு!

மைத்திரியை கொலை செய்யும் விவகாரம்! சிக்கிய தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி விவகாரம் தொடர்பான கைத்தொலைபேசி ஒலிப்பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலை சதி தொடர்பில் அம்பலப்படுத்தி நாமல் குமாரவின் கைத் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தகவல்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த தொலைபேசி ஹொங்கொங்கில் உள்ள அந்த கைத் தொலைபேசி நிறுவனத்தில் ஆய்வுக்கு அனுப்பி அந்த தகவல்கள் மீளவும் பெறப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பதிவினை இன்றைய தினம் சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2075 Mukadu · All rights reserved · designed by Speed IT net