வைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு!

வைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு!

உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புஜ்கலிபாவை கட்டிய பெருமையில் திளைக்கும் துபாயில் தற்போது மற்றுமொரு ஆச்சர்யம் இடம்பெற்றுள்ளது.

துபாயில் பிரசித்தி பெற்ற புர்ஜ் கோபுரத்திலுள்ள அரங்கில் தான் இந்த ஆச்சர்யம் அரங்கேறியுள்ளது.

அதுஎன்னவென்றால், வெள்ளைத்தங்கத்தில் இழைக்கப்பட்டு, 100 கேரட் வைரக்கற்கள் பதித்த ரூ.100 கோடி மதிப்பிலான பெண்கள் காலணி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பிரபல கோடீஸ்வர்கள் பங்கேற்கவுள்ள இதன் விற்பனையில் பலத்த போட்டி இருக்கும் என இந்தக் காலனியை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net