கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் : சம்பந்தன் கடிதம்!
எதிர்க்கட்சித் தலைவராக தனது கடமைகளை நிறைவேற்ற அனுமதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்பதுடன், அரசியலமைப்பிற்கு முரணானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.