வடக்கு லண்டனில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

வடக்கு லண்டனில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

வடக்கு லண்டன் என்பீல்ட் பகுதியில் ஆணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.10 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான முயற்சிகளைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு லண்டன் நகரில் வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட 131வது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 5821 Mukadu · All rights reserved · designed by Speed IT net