மைத்திரி தலைமையில் நாளை மற்றுமொரு நியமனம்!
இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நாளை நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சரவை சந்திப்பில் இன்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட 29 அமைச்சர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.