வவுனியாவில் ஹெரோயினுடன் ஐவர் கைது!
வவுனியா தேக்கவத்தை பகுதியில் உள்ள பாழைடைந்த வீடொன்றில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைய வவுனியா தேக்கவத்தை பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே ஹெரோயின் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சில ஹெரோயின் பைக்கற்றுகளையும் பொலிசார் மீட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.