மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

இன்றைய தினம் தொடக்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை காலநிலை அதிகரிக்க கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே மாலை 02 மணிக்கு பின்னர் மத்திய, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மவாட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Copyright © 5641 Mukadu · All rights reserved · designed by Speed IT net