கட்சி தாவிய வடிவேல் சுரேஷிற்கு கிடைத்த பதவி!
வடிவேல் சுரேஷ் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.
அந்தவகையில் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன் பதவியேற்றார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து வடிவேல் சுரேஷ், மஹிந்த அணிக்கு கட்சி தாவலில் ஈடுபட்ட நிலையில் பின்னர் மீண்டும் ரணிலுடன் இணைந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.