குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஒபாமா!

குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஒபாமா!

அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை, கிறிஸ்துமஸ் தாத்தா போன்று சென்று நேரில் சந்தித்து முன்னாள் அதிபர் ஒபாமா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இன்னும் நான்கே நாட்களில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வொஷிங்டனில் அமைந்துள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா திடீர் விஜயம் செய்திருந்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா குல்லாவுடனும், மூட்டை நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்த ஒபாமாவைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் ஆரவாரித்து மகிழ்ந்தனர்.

மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை தனித்தனியாக சந்தித்த ஒபாமா அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார்.



ஒபாமாவை அரவணைத்த குழந்தைகள், நடப்பவற்றை நம்பமுடியாது இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்தனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net