சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை மைத்திரி கைப்பற்றியதன் பின்னணி என்ன?

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை மைத்திரி கைப்பற்றியதன் பின்னணி என்ன?

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சிகள் தொடர்பில் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பான விசாரணை நிறைவடையும் வரை, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

அதற்கமைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net