புனித சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று ஆரம்பம்!

புனித சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று ஆரம்பம்!

இன்று அதிகாலை தொடக்கம் பெல்மதுல கல்பொத்தாவெல ஸ்ரீபாத ரஜமஹா விகாரையில் இருந்து புத்த பெருமானின் புனித பொருட்களுடன் கூடியதாக சமன் தெய்வத்தின் உருவச்சிலை ஊர்வலமாக சிவனொளிபாத மலை நோக்கி எடுத்துச் செல்லப்படுவதாக சிவனொளிபாத பௌத்த வணக்க ஸ்தலத்திற்கு பொறுப்பான விகாராதிபதி சங்கைக்குரிய பெங்கமுவ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

இரத்தினபுரி – அவிசாவளை – ஹட்டன் மார்க்கத்தின் ஊடாகவும், பெல்மதுல – பலாங்கொட மார்க்கத்தின் ஊடாகவும், இரத்தினபுரி – பலாபத்தல ரஜமாவத்தை ஊடாகவும் மூன்று பெரஹராக்கள் இடம்பெறுகின்றன.

சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்.

இம்முறையும் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என யாத்திரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net