இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக புடின் அறிவிப்பு!

இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக புடின் அறிவிப்பு!

66 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.

இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புடின் கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.

இதற்கிடையே புடினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) ஆகிய இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இதனை புடின் மறுத்துள்ளார்.

இந்தநிலையில் அண்மையில் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட புடினிடம் ஊடகவியலாளர் ஒருவர் அவரது 2-வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ‘‘நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என புடின் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். எனினும் அவரது பெயரை வெளியிட புடின் மறுத்துவிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net