வெடி விபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரிப்பு!

வெடி விபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரிப்பு!

செக் குடியரசின் கிழக்கு பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

செக் குடியரசு தலைநகர் பிராகாவிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் கிழக்கிலுள்ள கார்வினா நகரில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது.

குறித்த சுரங்கத்தில் வழமை போன்று தொழிலாளர்கள் பணிக்கு சென்றிருந்தனர். இந்தநிலையில் அங்கு பாறைகளிலிருந்து மீத்தேன் வாயு கசிய ஆரம்பித்தது.

சில நிமிடங்களில் மீத்தேன் எரிவாயு கசிவு காரணமாக அங்கு வெடி விபத்து ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக குறித்த வெடி விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

காயமடைந்த 10 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net