ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றமையை வரவேற்று வாழைச்சேனையில் பால் சோறு கொடுத்து கொண்டாடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் ப.லெட்சுமி தலைமையில் இந்த கொண்டாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.தையூப் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய அருகில் வைத்து வீதியில் செல்பவர்களுக்கு பால் சோறும், குளிர்பானமும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்கால ஜனாதிபதியை அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறோம் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் படம் பொறிக்கப்பட்ட பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


