பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 4,035 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 4,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5,550 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 10 மணிமுதல் இன்று பகல் 2 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17,728 பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.