மட்டக்களப்பில் “வேட்டையன்” முழுநீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா.
எஸ்.பரணிதரன் தயாரிப்பில் மட்டக்களப்பில் உருவான ‘வேட்டையன்’ திரைத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை (22ம் திகதி) இரவு 7.00 மணியளவில், மட்டக்களப்பு அஞ்சனா மண்டபத்தில் நடைபெற்றது.
எஸ்.என்.விஸ்னுஜன் இயக்கத்தில் எஸ்.பரணிதரன் தயரிப்பில் உருவான வேட்டையன் முழுநீள திரை திரைப்படத்திற்கு பாடல் வரிகளை லோஜிதன் எழுதியுள்ளார், இதற்கு அன்ரூ இசையமைத்துள்ளார்.
பாடல்களை சபேஷ், தேவகுமார், ஹிந்துஜன், நீரஜா, ஹர்சன், யூட்தர்சன், நிசாகரன் போன்றோர் இணைந்து ஆறு பாடல்களை பாடியுள்ளனர்.
மேலும், தினேஸ் ஒலி பொறியமைப்பினையும், சஞ்சித்லக்மன் ஒலி அரங்கத்தினையஞம் வழங்கியுள்ளனர்.
ஆதி டிரு, ஜனா, கோடீஸ்வரன், திவ்யாநிலா, பிரணா, இம்ரான், நிருசாந் உள்ளிட்ட நடிகர்கள் இந்த வேட்டையனில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் சதீஸ் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்திய சினிமாவுக்கு நிகராக உருவாகும் திரைப்படத்தின் பாடல் வரிகளுக்கு ஏற்றால்போல் அருமையாக இசைவடிவம் கொடுக்கப்பட்டுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும், இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப் படத்தினை திரையுடுமவரை பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
















