தங்காலையில் துப்பாக்கிச்சூடு நால்வர் பலி!
தங்காலை குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவரால் இந்த துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.