புளோரிடாவில் கோர விபத்து: நால்வர் பலி!

புளோரிடாவில் கோர விபத்து: நால்வர் பலி!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின், ஹைலண்ட்ஸ் கவுண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நத்தார் பண்டிகையான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து நேர்ந்த பின்னர் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து, அடையாளம் காணமுடியாத அளவிற்கு சேதமாகியுள்ளன.

விபத்தின் பின்னர் மூடப்பட்ட வீதி, 7 மணித்தியாலங்களின் பின்னரே திறக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 7171 Mukadu · All rights reserved · designed by Speed IT net