கொங்கோவில் இடம்பெற்ற கோர விபத்தில் 50 பேர் பலி!

கொங்கோவில் இடம்பெற்ற கோர விபத்தில் 50 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்கா நாடான கொங்கோவில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கோர விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயரிழந்துள்ளதோடு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கிசன்டு வழியாக அளவுக்கதிகமான பயணிகளுடன் வேகமாக பயணித்த ஒரு பேருந்தும் எதிரே வந்த லொரியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

Copyright © 5507 Mukadu · All rights reserved · designed by Speed IT net