ரணிலை எச்சரிக்கும் மஹிந்த!
சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30க்கு மேல் அதிகரித்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விடுத்துள்ளது.

19வது அரசியலமைப்பு திருத்தத்தில் 30 என்ற எண்ணிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையை 30 விட அதிகரிக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிக்கிறது. எனினும் 19இல் அதற்கு வாய்ப்பில்லை என்றும் அபேகுணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.