ஒருநாளில் மூன்று கோடி ரூபா வருமானம்!

ஒருநாளில் மூன்று கோடி ரூபா வருமானம்!

நத்தார் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் மூன்று கோடி ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நாட்களில் நாளாந்த வருமானம் 3 கோடி ரூபாவைத் தாண்டியதாக அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை 3 கோடி 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

வேறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net