முச்சக்கரவண்டி பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊடகமொன்று குறித்த தீர்மானம் தொடர்பான செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.

முச்சக்கரவண்டி கட்டணங்களுடன், பாடசாலைக்கான வான் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக மாற்றப்படும் என்பதுடன், பாடசாலை வான்களுக்கான கட்டணம் மூன்று சதவீதத்தால் குறைக்கப்படும் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2638 Mukadu · All rights reserved · designed by Speed IT net