ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து சண் குகரவரதன் இடை நிறுத்தம்?

ஜனநாயக மக்கள் முன்னணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துக் கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன் கட்சியின் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், சகல பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உப தலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net