ஈட்டோபிக்கோ பகுதியில் விபத்து – முதியவர் பலி!

ஈட்டோபிக்கோ பகுதியில் விபத்து – முதியவர் பலி!

ஈட்டோபிக்கோ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில முதிவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 7 மணியளவில் டன்டாஸ் தெரு மற்றும் கோர்டோவா அவென்யூ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தப் பகுதியில் நடந்து சென்ற, ஏறக்குறைய 70 வயது மதிக்கத்தக்க ஆண் முதியவர் மீது வாகனம் ஒன்று மோதியதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Copyright © 4672 Mukadu · All rights reserved · designed by Speed IT net