ஏழு கோடி மோசடி செய்த சண். குகவரதன்?

ஏழு கோடி மோசடி செய்த சண். குகவரதன்?

ஏழு கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதனுக்கு, அமைச்சர் மனோ கணேசன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கனகசபை சற்குணநாதன் என்ற 75 வயது வயோதிபருடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில், அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனால், சண்முகநாதன் குகவரதனுக்கு, மின்னஞ்சல் ஊடாகக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர்பில், தனக்கு அறியத்தருமாறும், மனோ கணேசனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் முழு வடிவம் வருமாறு,

Copyright © 4583 Mukadu · All rights reserved · designed by Speed IT net