ஒற்றுமையின் மூலம் நாடு வலிமை பெறும்!
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஒற்றுமையின் மூலம் இலங்கை வலிமைபெறும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒற்றுமையே தமது வெற்றியின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலர்ந்திருக்கும் 2019ஆம் ஆண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையுடன் 2019ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் அனைவருக்கும் சமாதானமும், சுபீட்சமும் உண்டாக வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.