அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் எண்ணம் இல்லை!
அமைச்சுகளுக்கான திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதத்தில் சில அமைச்சர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆனால், இதில் எவ்வித உள்நோக்கமோ, அரசியல் பழிவாங்கல்களோ இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றிய ஜனாதிபதி,

”எந்த அமைச்சின் கீழ் என்ன திணைக்களம் வரவேண்டும் என்பதை பிரதமரே தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், பிரதமரிடமிருந்து அப்பட்டியல் கிடைக்காத நிலையில் ஜனாதிபதி செயலக அதிகாரிகளின் உதவியுடன் அதனை தீர்மானிக்க வேண்டி ஏற்பட்டது” எனக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் வேலைப்பளு காரணமாகவே பட்டியலை அனுப்பவில்லை என ஜனாதிபதிக்கு பதிலளித்த பிரதமர், புதிய பட்டியலையும் ஒப்படைத்தார்.
இதன்பிரகாரம் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்களுக்கு நிவாரணம் கிட்டும் எனவும் குறிப்பிட்டார்.