உலக வங்கியின் நிதியுதவியுடன் 50 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு!

உலக வங்கியின் நிதியுதவியுடன் 50 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு!

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தில் பணிபுரியும் சிரேஷ்ட ஊழியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிதியுதவியில் 50 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது திணைக்களத்தில் 2019ஆம் ஆண்டிற்கான கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அத்தோடு ஊழியர்கள் அனைவரும் சத்தியபிரமாண செய்த நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6566 Mukadu · All rights reserved · designed by Speed IT net