முதலில் ஜனாதிபதித் தேர்தல்!
முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என தனக்கு தோன்றுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குமார வெல்கம இதனை கூறியுள்ளார்.
உண்மையை பேசும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் வலி ஏற்படுகிறது. நான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
குமார வெல்கம கடந்த காலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
மைத்திரி – மகிந்த கூட்டணியால் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் மகிந்த பிரதமர் பதவியை கைவிட்டு எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டும் எனவும் குமார வெல்கமவே முதலில் கூறியிருந்தார்.
அத்துடன் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் வெல்கம கடும் எதிர்ப்புகளை முன்வைத்து வந்துள்ளார்.