டென்மார்க்கில் ரயில் விபத்து – ஆறு பேர் பலி!

டென்மார்க்கில் ரயில் விபத்து – ஆறு பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் Zealand – Fyn ஆகிய இரண்டு தீவுகளை இணைக்கும் Danish பாலத்தில் இன்று(புதன்கிழமை) நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது விபத்துக்குள்ளான பயணிகள் ரயிலில் 131 பயணிகள் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 4965 Mukadu · All rights reserved · designed by Speed IT net