கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயை எரித்த கொடூரம்!
நீர்கொழும்பு பிரதேசத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று எரியூட்டி கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 31 ஆம் திகதி இரவு நாய் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த நாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளது.
லெப்ரடோ (labrador) இன நாயொன்றே இவ்வாறு தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், நாய் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
