சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைவு!

மொரட்டுவ மாநகர சபையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 23 உறுப்பினர்களைக் கொண்ட மொரட்டுவ மாநகரசபையில் தற்போது இவர்களின் இணைவுடன் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மொரட்டுவ மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சியின் 16 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 4 உறுப்பினர்களும் சுயேட்சை குழுவின் உறுப்பினர் ஒருவரும் எதிர்க்கட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.