மீண்டும் கிரியெல்லவின் கீழ் வருகின்றன அரச வங்கிகள்!

அரச வங்கிகளை பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் பொறுப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் அரச வங்கிகள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
இதன்காரணமாக இதற்கு முன்னர் அரச வங்கிகளை தன் பொறுப்பில் வைத்திருந்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அதிருப்தி அடைந்திருந்தார்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பழிவாங்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், நேற்றைய(புதன்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், மீண்டும் அரச வங்கிகளை லக்ஸ்மன் கிரியெல்லவின் அமைச்சின் கீழ் கொண்டு வரவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.