ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ரயில் நிலையத்திற்கு அருகில் பொலிஸார் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பில் 18 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வெள்ள்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net