இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்!

இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்!

நியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்திற்குள் ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறியமை இதற்குக் காரணமாகும்.

இந்த அபராதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆட்ட மத்தியஸ்தரான றிச்சி றிச்சட்சன் விதித்திருக்கிறார்.

இதன் பிரகாரம் இலங்கை அணியின் வீரர்கள் தமக்குரிய போட்டி சம்பளத்தில் 10 சதவீத தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

அணியின் தலைவர் லசித் மாலிங்க 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

Copyright © 0019 Mukadu · All rights reserved · designed by Speed IT net