சீனாவுக்கு செல்லும் ‘கனா’

சீனாவுக்கு செல்லும் ‘கனா’

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் சீனாவில் கிரிக்கெட் விளையாட்டு இல்லை என்றாலும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு கிராமத்து பெண், விளையாட்டு துறையில் முன்னேறிய கதை என்பதால் இப்படம் சீனாவில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சீனாவில் ‘கனா’ திரைப்படத்தை வெளியிட விநியோகிஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் சீன மொழியில் படம் டப் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இந்த படம் சீனாவுக்கு செல்ல வேண்டும் என்பது தனது கனவு என நடிகர் சத்யராஜ் தெரிவித்திருந்தார் .

இந்தியாவில் தயாரான ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றான ‘தங்கல்’ சீனாவில் சூப்பர்ஹிட் ஆகி சுமார் ரூ.1000 கோடி வரை வசூல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0699 Mukadu · All rights reserved · designed by Speed IT net