மஹிந்தவிற்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடாப்பிடியில் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை மஹிந்தவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த அலுவலகத்தில் தொடர்ந்து முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனே இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதாக சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியில் மஹிந்த உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சம்பந்தனின் தனிப்பட்ட ஊழியர் சபை விலகிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.